அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாத கணவரின் கழுத்தை அறுத்த இந்திய பெண் கைது

வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பை போல வைத்திருப்பதாக அரவிந்திடம் சந்திர பிரபா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வசித்து வந்தவர் அரவிந்த். இவரது மனைவி சந்திர பிரபா (வயது 44). அவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்திய வம்சாவளி தம்பதியான அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்தவகையில் வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பை போல வைத்திருப்பதாக அரவிந்திடம் சந்திர பிரபா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சந்திர பிரபா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் அடைந்த அரவிந்த் அலறி துடித்தார். தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து கணவரின் கழுத்தை அறுத்த சந்திர பிரபாவை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story






