ஈரானில் 20 நாட்களுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்


ஈரானில் 20 நாட்களுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்
x

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஈரானில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரான்,

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சுமார் 12 நாட்கள் நடந்த மோதல் நீடித்த நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும், இஸ்ரேலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த மோதல் முடிவுக்கு வந்தது.

இதனிடையே, போர் பதற்றம் காரணமாக ஈரானில் சர்வதேச விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஈரானில் இன்று தரையிறங்கியதாக ஈரானின் விமான போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர் மெஹ்தி ரெமாசனி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஈரானின் விமான போக்குவரத்து துறையின் ஸ்திரத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலுடனான சமீபத்திய போர் பதற்றங்களுக்கு பிறகு, இஸ்ரேல் தனது வான்வெளியை அமைதியாகவும், புத்திசாலித்தனமானகவும் நிர்வகித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story