ஈரானில் ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை


ஈரானில் ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை
x

ஈரானில் கடந்த 2018-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவினர்.

டெஹ்ரான்,

மத்திய கிழக்காசிய நாடான ஈரானில் ஐ.எஸ்., அல்-கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன.அவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது.இதனை கட்டுப்படுத்த பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகின்றன. எனினும் இந்த தாக்குதல் தொடர் கதையாக உள்ளது.

அந்தவகையில் கடந்த 2018-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவினர். பின்னர் ராணுவ வீரர்களை குறிவைத்து அவர்கள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் பயங்கரவாதிகள் சிலரை கொன்றனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிகுண்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பயங்கரவாதிகள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி ஈரான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

1 More update

Next Story