ஜப்பானில் புதிய வரலாறு: நாட்டின் முதல் பெண் பிரதமராகும் டகாய்ச்சி

நாடாளுமன்ற ஒட்டெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் முதல் பெண் பிரதமராக டகாய்ச்சி விரைவில் பதவியேற்க உள்ளார்.
ஜப்பானில் புதிய வரலாறு: நாட்டின் முதல் பெண் பிரதமராகும் டகாய்ச்சி
Published on

டோக்கியோ,

ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததால், இஷிபா தனது பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, லிபரல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் சனே டகாய்ச்சி உள்கட்சி வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லிபரல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற டகாய்ச்சி, ஜப்பான் பிரதமராக தேர்வு ஆவதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 465 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், 237 வாக்குகளைப் பெற்று ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் ஜப்பான் நாட்டின் 104வது பிரதமராக அவர் பதவி ஏற்க இருக்கிறார். இதன் மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெருமையையும் சனே டகாய்ச்சி பெறுகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com