பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு


பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு
x
தினத்தந்தி 21 Nov 2025 1:15 AM IST (Updated: 21 Nov 2025 1:16 AM IST)
t-max-icont-min-icon

கடந்த மாதம் வைர கிரீடம், நெக்ளஸ் உள்பட சுமார் ரூ.900 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரசித்தி பெற்ற லூவ்ரே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஈபிள் கோபுரத்துக்கு இணையான சிறப்பினை பெற்ற இந்த அருங்காட்சியகத்தை லட்சக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் வைர கிரீடம், நெக்ளஸ் உள்பட சுமார் ரூ.900 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். எனினும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

இந்த சம்பவம் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. எனவே பாதுகாப்பை பலப்படுத்த அங்கு 100 கேமராக்களை பொருத்த முடிவு செய்திருப்பதாக லூவ்ரே அருங்காட்சியக இயக்குனர் லாரன்ஸ் டெஸ் கார்ஸ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story