போதைப்பொருள் கடத்தலில் சிறுவனை ஈடுபடுத்திய தாய்க்கு 13 ஆண்டு சிறை


போதைப்பொருள் கடத்தலில் சிறுவனை ஈடுபடுத்திய தாய்க்கு 13 ஆண்டு சிறை
x

விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில் தனது 17 வயது மகனையும் அவர் ஈடுபடுத்தியது உறுதியானது

லண்டன்,

வட அமெரிக்க நாடான மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் மையமாக செயல்படுகிறது. அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கும் போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன. அந்தவகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பர்சானா கவுசர் (வயது 54) என்ற பெண் தனது 4 மகன்கள், மகள் மற்றும் மருமகள்களுடன் மெக்சிகோவில் இருந்து திரும்பினார்.

அப்போது பர்சானாவின் சூட்கேசில் 180 கிலோ போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.166 கோடி ஆகும்.

இதனையடுத்து பர்சானாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில் தனது 17 வயது மகனையும் அவர் ஈடுபடுத்தியது உறுதியானது. எனவே போதைப்பொருள் கடத்தலில் சிறுவனை ஈடுபட செய்த தாய்க்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பர்மிங்காம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story