இந்தியா வந்தடைந்தார் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்


இந்தியா வந்தடைந்தார் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்
x
தினத்தந்தி 16 March 2025 10:56 PM IST (Updated: 16 March 2025 11:35 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா - நியூசிலாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

5 நாள் அரசு முறைப்பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், இன்று இந்தியா வந்துள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் வந்துள்ளனர். பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு டெல்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரி சிங் பாகேல் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய பயணத்தின்போது பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து கிறிஸ்டோபர் லக்சன் விவாதிக்கிறார். இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story