இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மிச்செல் எச்.தேவோரெத் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
ஸ்டாக்ஹோம்,
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிசு என்ற அடிப்படையில், ஆறு நாட்களுக்கு ஆறு பரிசுகள் அறிவிக்கப்படும்.
2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு 2025-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 2025-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மிச்செல் எச்.தேவோரெத் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. மின்சார சுற்றுகள் (சர்கியூட்) ஒன்றில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயந்திர சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீடு ஆகியவற்றை கண்டறிந்ததற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.






