பாகிஸ்தானில் அவலம்; தாபாவில் உணவு சாப்பிட சென்ற இந்து வாலிபர் மீது கொடூர தாக்குதல்


பாகிஸ்தானில் அவலம்; தாபாவில் உணவு சாப்பிட சென்ற இந்து வாலிபர் மீது கொடூர தாக்குதல்
x
தினத்தந்தி 5 Oct 2025 1:33 AM IST (Updated: 5 Oct 2025 1:31 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் தாபாவுக்கு சாப்பிட சென்ற இந்து வாலிபரிடம் ரூ.60 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

கொத்ரி,

பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான கொடூர தாக்குதல்கள், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்து, கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வேற்றுமைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

அந்நாட்டின் சிந்த் மாகாணத்தில், கொத்ரி நகரில் இந்து பாக்ரி சமூக வாலிபரான தோலத் பாக்ரி என்பவர் மதிய உணவு சாப்பிடுவதற்காக, சாலையோர தாபாவுக்கு சென்றுள்ளார். ஆனால், அந்த தாபாவின் உரிமையாளர் மற்றும் மற்றவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து, தோலத்தின் கைகளையும், கால்களையும் கயிற்றால் கட்டினர். எவ்வளவு துணிச்சல் இருந்தால் தாபாவுக்கு சாப்பிட வந்திருப்பாய்? என அந்த கும்பல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

எவ்வளவு துணிச்சல் இருந்தால் தாபாவுக்கு சாப்பிட வந்திருப்பாய்? என அந்த கும்பல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது மதியம் சாப்பிட வந்த அவரை, இரக்கமே இன்றி கடுமையாக தாக்கியுள்ளனர். அவரிடம் இருந்த ரூ.60 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. இதனை தொடர்ந்து, தோலத் அளித்த புகாரின் பேரில் கொத்ரி போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிந்தனர். எனினும், யாரும் கைது செய்யப்படவில்லை.

1 More update

Next Story