நடுவானில் விமானத்தின் கதவை பயணி திறக்க முன்றதால் பரபரப்பு

நடுவானில் சென்றபோது ஒரு வாலிபர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் நெப்ராஸ்கா விமான நிலையத்தில் இருந்து டெட்ராய்டு நகருக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 67 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது ஒரு வாலிபர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார். இதனை பார்த்த விமான பணிப்பெண் அவரை தட்டிக் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த விமானம் அயோவா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அங்கு தயாராக இருந்த விமான நிலைய போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில், அவர் நெப்ராஸ்காவைச் சேர்ந்த மரியோ நிக்பிரேலஜ் (வயது 23) என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story






