இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்

விமானத்தை சாலையில் அவசரமாக தரையிறக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரத்தில் ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர் செர்ஜியோ ரவாக்லியா மற்றும் அவரது 60 வயதான தோழி ஆன் மரியா டி ஸ்டெஃபானோ ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
ப்ரீசியா ஆர்.ஜி. மாடல் இலகுரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது, இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தைப் பதிவு செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நெடுஞ்சாலையில் சென்ற சில வாகனங்களும் தீயில் சிக்கி எரிந்தன, அதில் இரண்டு வாகன ஓட்டிகள் காயமடைந்தனர். விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






