2 நாள் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றார் ராஜ்நாத் சிங்


2 நாள் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றார் ராஜ்நாத் சிங்
x

ஆஸ்திரேலியாவின் முக்கிய தலைவர்களையும் ராஜ்நாத் சிங் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்னி,

ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்பு மந்திரியுமான ரிச்சார்ட் மார்லெஸின் அழைப்பை ஏற்று, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்துக்குச் சென்றடைந்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பாதுகாப்பு மந்திரி ஒருவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளது இதுவே முதல் முறையாகும். இதுபற்றி, பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அரசு முறைப் பயணமாக சிட்னி சென்றடைந்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை, இந்தியத் தூதர் கோபால் பாக்லே வரவேற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தில், இருநாட்டு பாதுகாப்புத் துறைகளின் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவின் முக்கிய தலைவர்களையும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாதுகாப்புத் துறை தகவல் பகிர்வு, கடற்சார் பாதுகாப்பு உறவுகள் விரிவாக்கம் மற்றும் கூட்டு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்க மூன்று ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன.

1 More update

Next Story