பாகிஸ்தான்-இந்தோனேசியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பாகிஸ்தான்-இந்தோனேசியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பாகிஸ்தான்-இந்தோனேசியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து
Published on

இஸ்லாமாபாத்,

இந்தோனேசியா அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் சென்றார். 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா அதிபர் ஒருவர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும். இஸ்லாமாபாத் சென்ற அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருநாடுகளுக்கு இடையே ராணுவம், பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பாக 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பாகிஸ்தான் நாட்டின் மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் இந்தோனேசியா சென்று பட்டப்படிப்பு படிப்பது போன்றவை இதில் அடங்கும். மேலும் இந்தோனேசியாவை மருத்துவ அரங்கில் உயர்த்துவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர்கள் குழுவினர் அங்கு சென்று அவர்களுக்கு தொழில்முறை பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com