பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு: 6 வீரர்கள் பலி

கோப்புப்படம்
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது.
இஸ்லாமாபாத்,
ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதே முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆனால் தலீபான்கள் அதனை மறுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கைபர் பக்துங்க்வா மாகாண சோதனைச்சாவடியில் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Related Tags :
Next Story






