அமெரிக்க நாடாளுமன்றதில் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நிராகரிப்பு


அமெரிக்க நாடாளுமன்றதில் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நிராகரிப்பு
x

தீர்மானத்துக்கு எதிராக 140 எம்.பி.க்கள் வாக்களித்த நிலையில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த எம்.பி. அல் கிரீன். ஜனநாயக கட்சி எம்.பி.யான இவர் ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதற்கு தீர்மானத்திற்கு 47 ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். அதே சமயம், தீர்மானத்துக்கு எதிராக 140 எம்.பி.க்கள் வாக்களித்த நிலையில், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இது இந்த ஆண்டில் டிரம்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டாவது பதவி நீக்க தீர்மானம் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story