வெள்ளைமாளிகையில் குத்து விளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய டிரம்ப்


வெள்ளைமாளிகையில் குத்து விளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
x

இந்த நிகழ்ச்சியில் எப்பிஐ தலைவர் காஷ் படேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

வாஷிங்டன்,

நாடு முழுவதும் நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பல்வேறு நாடுகளில் தலைவர்கள் இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. வெள்ளைமாளிகையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குத்து விளக்கு ஏற்றி தீபாவளியை கொண்டாடினார்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க உளவு அமைப்பின் (எப்பிஐ) தலைவர் காஷ் படேல், தேசிய புலனாய்வு பிரிவு தலைவர் துளசி கப்பார்ட், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story