ரஷியாவுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை


ரஷியாவுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
x

உக்ரைனுடன் போரை முடிவுக்கு கொண்டு வந்தால், ரஷிய அதிபர் புதின் மாபெரும் தலைவராக பார்க்கப்படுவார் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலுக்கு செல்லும் வழியில், தன்னுடன் விமானத்தில் பயணித்த நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ரஷியாவிடம் நான் சொல்வேன். ‘‘இதோ பாருங்கள். நீங்கள் போரை முடிவுக்கு கொண்டுவராவிட்டால், உக்ரைனுக்கு ‘டோமாஹாக்ஸ்’ ஏவுகணைகளை அனுப்பி வைப்பேன்’’ என்று சொல்வேன். டோமாஹாக்ஸ் ஏவுகணை மிகவும் வியத்தகு ஆயுதம். தாக்குதலுக்கு ஏற்ற ஆயுதம். அந்த ஏவுகணையை அனுப்ப வேண்டிய அவசியத்தை ரஷியா ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்.

போரை முடிவுக்கு கொண்டு வந்தால், ரஷிய அதிபர் புதின் மாபெரும் தலைவராக பார்க்கப்படுவார். இல்லாவிட்டால், அது அவருக்கு நன்றாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story