காசா அமைதி வாரியத்தில் சேருவதற்கு கனடா பிரதமருக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெற்றார் டிரம்ப்

அமெரிக்காவின் தயவால் கனடா வாழவில்லை என்று கனடா பிரதமர் மார்க் கார்னி கூறினார்.
வாஷிங்டன்,
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தத்தை கொண்டு வந்தார். இதற்கிடையே காசாவில் அமைதியை ஏற்படுத்த அமைதி வாரியத்தை தனது தலைமையில் டிரம்ப் அமைத்தார். இதில் சேர 60-க்கும் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி கூறும்போது,
அமெரிக்காவின் தயவால் கனடா வாழவில்லை என்றும் டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர பணம் செலுத்த போவதில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் காசா அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை டிரம்ப் திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் மார்க் கார்னிக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தின் உரையைப் பகிர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எல்லாக் காலத்திலும் ஒன்றுசேர்க்கப்பட்ட தலைசிறந்த தலைவர்கள் வாரியமாக அமையவிருக்கும் அமைதி வாரியத்தில் கனடா இணைவது தொடர்பான உங்களுக்கான அழைப்பை இந்த வாரியம் திரும்பப் 'பெறுகிறது என்பதை இந்தக் கடிதம் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.






