பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்


பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
x
தினத்தந்தி 11 Dec 2025 5:10 PM IST (Updated: 11 Dec 2025 5:14 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு ரூ.840.25 கோடி மதிப்பிலான ஆயுத விற்பனை செய்வதற்கு அமெரிக்கா சில வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்து இருந்தது.

கராச்சி,

பாகிஸ்தானுக்கு எப்-16 போர் விமானங்களை விற்பது உள்பட ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதனை பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளிவரும் டான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது.

பயங்கரவாத ஒழிப்பு முயற்சிகள் மற்றும் வருங்கால நடவடிக்கைகளுக்கு தயாராவது ஆகிய அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதி அளிக்கும் என இதுதொடர்பாக, அமெரிக்க காங்கிரசுக்கு ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு கழகம் வெளியிட்ட கடிதம் தெரிவிக்கின்றது.

இதன்படி மேம்படுத்தப்பட்ட விமான மின்னணுவியல், பயிற்சி மற்றும் முழு அளவிலான தளவாட விநியோகம் உள்ளிட்டவை பாகிஸ்தானுக்கு கிடைக்கும். இதுதவிர, இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளின் விமான படைகளும் தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் இரு நாடுகளும் இணைந்து போர் எதிர்ப்பு நடவடிக்கைகள், பயிற்சிகள் உள்ளிட்டவற்றை இணைந்து மேற்கொள்ள வழிவகுக்கும். பாகிஸ்தானுக்கு பொறியியல், தொழில் நுட்பம் மற்றும் தளவாடங்கள் உதவி ஆகியவையும் அமெரிக்கா மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கிடைக்க பெறும்.

இந்தியாவுக்கு ரூ.840.25 கோடி மதிப்பிலான ஆயுத விற்பனை செய்வதற்கு அமெரிக்கா சில வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்து இருந்தது. உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் மண்டல அளவிலான அச்சுறுத்தல்களை தடுக்கவும் உதவியாக இந்த ஒப்பந்தம் அமையும். இந்த சூழலில், பாகிஸ்தானுடன் அமெரிக்கா ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக, உள்நாட்டு குழப்பங்கள், வன்முறை, மழை, வெள்ள பாதிப்பு போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீள்வதற்கு வேறு சில நாடுகள், சர்வதேச நாணய நிதியகம் உள்ளிட்ட அமைப்புகளிடம் கடன் பெறும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருந்தது. எனினும், அந்நாட்டுக்கு அளிக்கப்படும் நிதி பயங்கரவாத செயல்களுக்கே பயன்படுத்தப்படும் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

1 More update

Next Story