போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற ஹமாஸ் திட்டம் - டிரம்ப் புகார்


போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற ஹமாஸ் திட்டம் - டிரம்ப் புகார்
x

மீண்டும் தாக்குதல் தொடர்ந்தால் அமைதி நடவடிக்கையை மீறிய செயலாக கருதப்பட்டு பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

இஸ்ரேல் மற்றும் காசா முனையத்தை நிர்வகித்து வந்த ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தலையீட்டால் முடிவடைந்தது.

டிரம்பின் 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தை ஏற்று எகிப்தின் ஷரம்-அல்-ஷேக் மாநாட்டில் உலகத்தலைவர்கள் கையெழுத்திட்டனர். இந்தநிலையில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனம் மற்றும் காசா பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதாக டிரம்ப் நேற்று கூறினார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில், “எங்களுக்கு கிடைத்த தகவல்களில்படி காசாவில் ஹமாஸ் அமைப்பினர் தொடா்ந்து செயல்பட்டு தாக்குதலுக்கு சதி தீட்டுவது தெரியவந்துள்ளது. அங்கு மீண்டும் தாக்குதல் தொடர்ந்தால் அமைதி நடவடிக்கையை மீறிய செயலாக கருதப்பட்டு பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர்கள் அமைதி உடன்படிக்கையை மீறினால் எங்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லாதவகையில் படைகளை இறக்கி அனைவரையும் படுகொலை செய்ய நேரிடும்” என்றாா்.

1 More update

Next Story