அமெரிக்கா: பள்ளிக்கூடத்தில் இளைஞர் நடத்திய துப்பாக்கி சூடு - 4 பேர் உயிரிழப்பு


அமெரிக்கா: பள்ளிக்கூடத்தில் இளைஞர் நடத்திய துப்பாக்கி சூடு - 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Oct 2025 4:01 AM IST (Updated: 12 Oct 2025 2:06 PM IST)
t-max-icont-min-icon

படுகாயம் அடைந்த 12 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வடக்கு மாகாணமாக மிசிசிப்பி உள்ளது. அங்குள்ள லேலேண்ட் கிராமத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் பள்ளி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் பள்ளி மைதானத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானவர்கள் குவிந்து இருந்தனர். இந்த நிலையில் மைதானத்திற்குள் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரியாக சுட தொடங்கினான். கண்மூடித்தனமாக நடந்த இந்த தாக்குதலில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 12 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story