விசா விண்ணப்பதாரர்களின் வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும்: அமெரிக்கா அறிவிப்பு


விசா விண்ணப்பதாரர்களின் வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும்: அமெரிக்கா அறிவிப்பு
x

விசா விண்ணப்பதாரர்களின் வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்காக தனி அமைச்சரவை ஒன்றை குடியேற்றத்துறையுடன் இணைந்து பணியாற்ற உருவாக்கினார்.

மேலும் எச்-1பி விசா கட்டணத்தை இந்திய மதிப்பில் ரூ.90 லட்சமாக உயர்த்தி அறிவித்து கிடுக்கிப்பிடி மேற்கொண்டார். நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான் உள்ளிட்ட 19 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா விசாவுக்கு விண்ணபிப்பதற்கு நிரந்தர தடைவிதித்தார். தற்போது அமெரிக்கா விசாவுக்கு விண்ணபிப்பவர்களுக்கு புதியதொரு நடைமுறையை அமெரிக்க அரசாங்கம் விடுத்துள்ளது.

அதன்படி எச்-1பி மற்றும் எச்-4 விசா விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சமூக வலைத்தள கணக்கை அனைவரும் பார்க்கும் வகையில் ‘பொது’வில் வைக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர்களுடைய வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story