ஆஸ்திரேலியாவில் கார் ஓட்டும்போது செல்போனில் மேப் பார்த்த பெண்ணுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்


ஆஸ்திரேலியாவில் கார் ஓட்டும்போது செல்போனில் மேப் பார்த்த பெண்ணுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
x

அபராதம் விதிக்கப்பட்டதால் போலீசாரிடம் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகர சாலையில் மக்ரினா ஸ்டிவக்டாஸ் (வயது 22) என்ற இளம்பெண் காரை ஓட்டிச் சென்றார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் காரை நிறுத்தி வழக்கமான சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் செல்போனில் மேப் பார்த்து காரை ஒட்டிச் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து காரில் செல்போன் பயன்படுத்தியதாக கூறி அந்த பெண்ணுக்கு சுமார் ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போக்குவரத்து விதிகளை போலீசார் காண்பித்த பிறகே அவர் அங்கிருந்து சென்றார்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாண போக்குவரத்து விதியின்படி முழு ஓட்டுனர் உரிமம், உணவு வினியோகம் உள்ளிட்ட காரணங்களுக்காக வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story