'பா.ஜ.க. 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது' - மம்தா பானர்ஜி


பா.ஜ.க. 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 13 April 2024 10:08 AM GMT (Updated: 13 April 2024 12:15 PM GMT)

மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 200 இடங்களில் கூட வெற்றி பெறாது என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், 'பா.ஜ.க. 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது' என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜல்பைகுரி பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"பா.ஜ.க. 200 இடங்களில் கூட வெற்றி பெறாது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதங்களுக்கு இரையாகாதீர்கள். அவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் கூறப்படும் வெற்று வாக்குறுதிகள். டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை பா.ஜ.க. அழித்துவிட்டது."

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


Next Story