ஈரோட்டில் நடைபயிற்சி செய்தபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஈரோட்டில் நடைபயிற்சி செய்தபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 31 March 2024 7:51 AM IST (Updated: 31 March 2024 8:52 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு, நாமக்கல், கரூர் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இன்று பிரசாரம் செய்கிறார்.

ஈரோடு,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் உள்ள உழவர் சந்தை அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்கு சேகரித்தார். நடைபயிற்சி மேற்கொண்ட அவர், உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார். முதல் அமைச்சருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சின்னியம்பாளையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story