புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த காங்கிரஸ் வேட்பாளர்


புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த காங்கிரஸ் வேட்பாளர்
x

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கம் ஜீவா நகர் பகுதியில் இன்று பிரசாரம் செய்தார். திறந்தவெளி ஜீப்பில் நின்று அவர் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் திடீரென பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, வைத்திலிங்கம் மயங்கி விழுந்தார். இதையடுத்து பிரசார வாகனத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, அருகே இருந்த வீட்டில் ஓய்வெடுக்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சுமார் 15 நிமிடங்கள் ஓய்வெடுத்த நிலையில், வைத்திலிங்கம் மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார்.



Next Story