மேற்கு வங்காளத்தில் 2 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

கோப்புப்படம்
பராசத் மற்றும் மதுராபூர் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
நாடாளுமன்ற 7-வது கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மேற்கு வங்காளத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இது தொடர்பாக அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளித்தனர்.
அதன் அடிப்படையில் பராசத் மற்றும் மதுராபூர் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த 2 வாக்குச்சாவடிகளிலும் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story