தேர்தல் நடத்தை விதிமீறல்: பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு
முன் அனுமதி இன்றி ஆலோசனை கூட்டம் நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த பின் கடநாடு கிராமத்தில் எந்தவித முன் அனுமதியும் இன்றி 100-க்கும் மேற்பட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் தேனாடுகம்பை போலீசார் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story