தி.மு.க வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் - பி.மூர்த்தி ஆவேச பேச்சு


தி.மு.க வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் - பி.மூர்த்தி ஆவேச பேச்சு
x

40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும் என்று அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.

தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் அறிமுக கூட்டம் பத்திரபதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.முர்த்தி பேசியதாவது:-

தேனி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும். 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும். தேனி நாடாளுமன்ற தொகுதியில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்வேன்.

உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும், கட்சிக்கு சிலர் துரோகம் செய்து வருகின்றனர். சோழவந்தான் தொகுதியில் நான் அப்போது உழைத்ததால் நான் தற்போது அமைச்சராக பதவி உயர்ந்துள்ளேன். எனவே கட்சியினர் துரோகம் செய்யாமல் உண்மையாக வேட்பாளர்களுக்கு உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.


Next Story