தி.மு.க. - கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் 29-ந்தேதி முதல் பிரசாரம்
தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது. அந்த கட்சிக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 29-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அவர், ஈரோடு, சேலம், வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, கோவை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்தும், திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ, சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன், மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன், திருப்பூர் தொகுதியில் களம் காணும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்தும் வாக்குகள் சேகரிக்க உள்ளார்.
கமல்ஹாசனின் பிரசார பயண விபரம் வருமாறு:-
29-ந்தேதி- ஈரோடு, 30-ந்தேதி-சேலம், ஏப்ரல் 2-ந்தேதி- திருச்சி, 3-ந்தேதி -சிதம்பரம், 4-ந்தேதி- ஸ்ரீபெரும்புதூர், 7-ந்தேதி- சென்னை, 10-ந்தேதி- மதுரை, 11-ந்தேதி- தூத்துக்குடி, 14-ந்தேதி- திருப்பூர், 15-ந்தேதி- கோவை, 16-ந்தேதி- பொள்ளாச்சி.
இவ்வாறு பயணத்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.