இன்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது பா.ஜனதா: பெரும் எதிர்பார்ப்பு


இன்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது பா.ஜனதா: பெரும் எதிர்பார்ப்பு
x

கோப்புப்படம்

டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெறும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

புதுடெல்லி,

18-வது மக்களவை தேர்தல் வருகிற 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்த நிலையில் பா.ஜனதா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெறும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story