4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 63.04 சதவீத வாக்குப்பதிவு
4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 63.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. 3-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து 4-வது கட்டமாக, 96 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
Live Updates
- 13 May 2024 9:21 PM IST
4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 63.04 சதவீத வாக்குப்பதிவு
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
இதனிடையே, 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதனைதொடர்ந்து வரும் 20, 25 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 96 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற 4ம் கட்ட தேர்தலில் 63.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
ஆந்திரா -68.20%
பீகார் - 55.92%
ஜம்மு-காஷ்மீர் - 36.88%
ஜார்க்கண்ட் - 64.30%
மத்தியபிரதேசம் - 69.16%
மராட்டியம் - 52.93%
ஒடிசா - 64.23%
தெலுங்கானா - 61.59%
உத்தரபிரதேசம் - 58.02%
மேற்குவங்கம் - 76.02%
- 13 May 2024 6:14 PM IST
4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்நிலையில், 4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சீல் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
- 13 May 2024 5:13 PM IST
10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி 52.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
ஆந்திரா - 55.49%
பீகார் - 45.23%
ஜம்மு-காஷ்மீர் - 29.93%
ஜார்க்கண்ட் - 56.42%
மத்தியபிரதேசம் - 59.63%
மராட்டியம் - 42.35%
ஒடிசா - 52.91%
தெலுங்கானா - 53.34%
உத்தரபிரதேசம் - 48.41%
மேற்குவங்கம் - 66.05%
நாடாளுமன்ற 4ம் கட்ட தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா சட்டசபை தேர்தலும் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், மாலை 3 மணி நிலவரப்படி ஆந்திராவில் 55.49 சதவீதமும், ஒடிசாவில் முதற்கட்ட தேர்தலில் 52.91 சதவீதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.
- 13 May 2024 5:02 PM IST
ஐதராபாத் ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நடிகர் ராம்சரண் தனது மனைவி உபாசனாவுடன் வந்து வாக்களித்தார்.
- 13 May 2024 4:56 PM IST
தெலுங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நடிகர் மகேஷ் பாபு தனது வாக்கினை பதிவு செய்தார்.
- 13 May 2024 2:50 PM IST
10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
* ஆந்திரா - 40.26%
* பீகார் - 34.44%
* ஜார்க்கண்ட் - 43.80%
* மத்தியபிரதேசம் - 48.52%
* மராட்டியம் - 30.85%
* ஒடிசா - 39.30%
* தெலுங்கானா - 40.38%
* உத்தரபிரதேசம் - 39.68%
* மேற்குவங்கம் - 51.87%
* ஜம்மு-காஷ்மீர் - 23.57%
- 13 May 2024 11:55 AM IST
11 மணி வாக்குப்பதிவு சதவீத விவரம்
ஆந்திர பிரதேசம்; 23.10%
பீகார்: 22.54
ஜம்மு காஷ்மீர்: 14.94%
ஜார்க்கண்ட்: 27.40%
மத்திய பிரதேசம்: 32.38%
மராட்டியம்: 17.51%
ஒடிசா: 23.28%
தெலுங்கானா: 24.31%
உத்தர பிரதேசம்: 27.12%
மேற்கு வங்காளம்; 32.78%
*ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் 11 மணி நிலவரப்படி 23.00 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
*ஒடிசாவில் 23.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
- 13 May 2024 10:00 AM IST
காலை 9 மணி நிலவரப்படி 10.35 சதவீத வாக்குகள் பதிவு
ஆந்திரா- 9.05 சதவீதம்
பீகார்-10.18 சதவீதம்
ஜம்மு காஷ்மீர்- 5.07 சதவீதம்
ஜார்க்கண்ட் -11.78 சதவீதம்
மத்திய பிரதேசம்- 14.97 சதவீதம்
மராட்டியம்-6.45 சதவீதம்
ஒடிஷா- 9.23 சதவீதம்
தெலுங்கனா-9.51 சதவீதம்
உத்தர பிரதேசம்-11.67 சதவீதம்
மேற்கு வங்கம்- 15.24 சதவீதம்
9 மணி நிலவரம்
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 9 மணி நிலவரப்படி 9.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஒடிசா சட்டப்பேரவை முதல் கட்ட வாக்குப்பதிவு: 9.25 சதவீத வாக்குகள் பதிவு