பிரதமர் மோடியின் பிரசாரம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது - அமைச்சர் மனோ தங்கராஜ்


பிரதமர் மோடியின் பிரசாரம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது - அமைச்சர் மனோ தங்கராஜ்
x
தினத்தந்தி 11 April 2024 4:52 PM GMT (Updated: 11 April 2024 4:53 PM GMT)

பிரதமர் மோடியின் பிரசாரம் சாதியை முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு, முழுக்க முழுக்க மதத்தையம், சாதியையும் முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது.குறிப்பாக 06/04/2024 அன்று, உத்திர பிரதேசத்தில் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் அறிக்கை போல இருப்பதாக பேசினார்.

08/04/2024 அன்று, பீகாரில் பேசுகையில், காங்கிரஸ் கட்சி ராமரை இழிவுபடுத்தியதாகக் கூறினார்.

09/04/2024 அன்று, உத்திர பிரதேசத்தில் பேசுகையில், நவராத்ரி முதல் நாளன்று தேவியை வணங்குபவர்கள் காங்கிரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், நல்ல சாதியை சார்ந்த ஒருவர் தங்கள் கட்சி தலைவராக இருப்பதாகக் கூறி, பிற சமூக மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தினார்

இவை அனைத்தும் வன்மையான கண்டனத்திற்குரிய பேச்சு. இப்பேர்பட்ட ஒருவர் இந்திய நாட்டின் பிரதமர் என்று சொல்வது இந்தியாவிற்கே தலைகுனிவு. என தெரிவித்துள்ளார்.


Next Story