தமிழக பா.ஜனதா கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு


தமிழக பா.ஜனதா கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 1 April 2024 11:29 PM IST (Updated: 1 April 2024 11:29 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக பா.ஜனதா வெளியிட்டுள்ளது

சென்னை,

தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி வரும் 9-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சென்னையில் 3 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வாகனத்தில் 'ரோடு ஷோ' நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக பா.ஜனதா சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக பா.ஜனதா வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி ராணி, கிஷண் ரெட்டி, உத்திரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேசிய மகளிர் ஆணையத் தலைவி குஷ்பு உள்ளிட்ட 40 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

1 More update

Next Story