அமேதியில் ராகுல்காந்தி போட்டி?
அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரசின் கோட்டையான அமேதியில் கடந்த 2004 முதல் 2014 வரை தொடர்ச்சியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராகுல்காந்தி. கடந்த 2019-ல் நடந்த தேர்தலின் போது அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்த தேர்தலில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அங்கு வெற்றி பெற்று எம்.பி.ஆனார்.
இந்தநிலையில் ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ராகுல்காந்தியும் ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வயநாடு தொகுதியில் தேர்தல் முடிந்த பிறகு அமேதி தொகுதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடும் நிலையில் அமேதியிலும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.