பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் செய்தி தொடர்பாளர்


பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் செய்தி தொடர்பாளர்
x

காங்கிரஸ் முன்னாள் செய்தி தொடர்பாளர் ரோகன் குப்தா பா.ஜனதாவில் இணைந்தார்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரோகன் குப்தா, ஆமதாபாத் கிழக்கு மக்களவை தொகுதியின் வேட்பளராக காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் அறிவித்தது. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளராக இருந்த ரோகன் குப்தா நேற்று பா.ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார். டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் முன்னிலையில் ரோகன் குப்தா அக்கட்சியில் இணைந்தார்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளாக காங்கிரசுடன் இணைந்திருந்த கட்சியை கடுமையாக சாடிய ரோகன் குப்தா, அது திசையில்லாமல் போய்விட்டதாகவும், முரண்பாடுகள் நிறைந்ததாகவும், நம்பகத்தன்மையை இழக்க வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாதது, சி.ஏ.ஏ-வுக்கு எதிர்ப்பு மற்றும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தது உள்ளிட்ட பல விஷயங்களில் காங்கிரசின் நிலைப்பாட்டை ரோகன் குப்தா மேற்கோள் காட்டினார்.


Next Story