தென்சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை பிரசார ஆட்டோ பறிமுதல்


தென்சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை பிரசார ஆட்டோ பறிமுதல்
x

தென்சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை பிரசார ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இவர் ஜாபர்கான்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது பிரசார வாகனத்தின் முன் ஆட்டோவில் பேண்டு வாத்திய குழுவினர் அமர்ந்து இசைத்தபடி பிரசாரம் சென்றனர். இந்த வாகனத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்துவற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை

இதையடுத்து, தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் தென்சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை பிரசார ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story