திருவள்ளூர் தொகுதியில் தபால் வாக்குகளை செலுத்துவதில் குளறுபடி?


திருவள்ளூர் தொகுதியில் தபால் வாக்குகளை செலுத்துவதில் குளறுபடி?
x

தபால் வாக்குகளைச் செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் புகாரளித்துள்ளனர்.

சென்னை,

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தபால் வாக்குகளைச் செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் புகாரளித்துள்ளனர்.

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிமையங்களில் பணி புரியக்கூடிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் ஆவணங்களைத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வழங்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. தபால் வாக்களிப்பதற்கு இதுவரை இருமுறை மனு அளித்தும் தபால்வாக்கு செலுத்தவில்லை எனவும் மீண்டும் மனு அளித்திருப்பதாகவும் இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முறையாக நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்கள்.



1 More update

Next Story