முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற துரை வைகோ


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற துரை வைகோ
x
தினத்தந்தி 19 March 2024 4:46 PM IST (Updated: 19 March 2024 4:52 PM IST)
t-max-icont-min-icon

ம.தி.மு.க. சார்பில் திருச்சியில் போட்டியிடும் துரை வைகோ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் திருச்சியில் போட்டியிடும் துரை வைகோ அண்ணா அறிவாலயம் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனிருந்தார்.

அதேபோல் , தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக திருப்பூரில் போட்டியிடும் சுப்பராயன், நாகையில் போட்டியிடும் வை.செல்வராஜ் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உடனிருந்தார்.


Next Story