வயநாடு எனது வீடு, மக்களே எனது குடும்பம் - ராகுல்காந்தி


வயநாடு எனது வீடு, மக்களே எனது குடும்பம் - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 3 April 2024 10:29 AM GMT (Updated: 3 April 2024 11:43 AM GMT)

வயநாடு மக்களின் அசைக்கமுடியாத ஆதரவிற்காக ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

வயநாடு தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின் ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்துக்காகவும், இந்திய அரசியல் சாசனத்துக்காகவும் நடக்கும் போராட்டம். இந்த நாட்டின் ஜனநாயகத்தையும், இந்த நாட்டின் அரசியல் சாசனத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் காக்கும் சக்தி. யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.

அரசியலமைப்பை யார் தாக்குகிறார்கள், யார் இந்த நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைத் தாக்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும் என்றார். வயநாடு தனது வீடு" என்றும், "மக்களே தனது குடும்பம்" அதன் அழகிய வரலாறு மற்றும் பாரம்பரியங்கள் தனது "வழிபாட்டு ஒளி" என்றும் அவர் கூறினார். மேலும் வயநாடு மக்களின் அசைக்கமுடியாத ஆதரவிற்காக நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நியாயத்தின் புதிய சகாப்தத்தில் நாம் அடியெடுத்து வைக்கும்போது, உங்கள் ஒவ்வொருவருக்கும் சேவை செய்வதில் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று அவர் கூறினார்.

வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.


Next Story