பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து: வெற்றியுடன் தொடங்கிய ஸ்பெயின்


பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து: வெற்றியுடன் தொடங்கிய ஸ்பெயின்
x

image courtesy: AFP

ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை தோற்கடித்தது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது.

ஒலிம்பிக் திருவிழா அதிகாரபூர்வமாக தொடங்கும் முன்பே சில போட்டிகள் ஆரம்பித்து நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

இதில்'சி' பிரிவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை சாய்த்தது. இதில் முதல் பாதியில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை இருந்த நிலையில் 62-வது நிமிடத்தில் ஸ்பெயினின் செர்ஜியோ கோம்ஸ் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.


Next Story