2-வது ஒரு நாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெறுகிறது.
2-வது ஒரு நாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
Published on

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

பெர்த்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் பலமுறை மழை குறுக்கிட்டதால் முழு உத்வேகத்தை பார்க்க முடியவில்லை. 26 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்திய அணி 136 ரன்களே எடுத்தது. லோகேஷ் ராகுல் (38 ரன்கள்), அக்ஷர் பட்டேல் (31 ரன்கள்) தவிர மற்றவர்கள் ஏமாற்றம் அளித்தனர். அந்த எளிய இலக்கை ஆஸ்திரேலியா 21.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com