2வது டி20: இந்திய அணிக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது
2வது டி20: இந்திய அணிக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
Published on

விசாகப்பட்டினம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன் தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.  அந்த அணியில் சமரி அதபத்து, ஹர்ஷிதா சமரவிக்ரம மட்டும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். சமரி அதபத்து 31ரன்களும், ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 129 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com