2வது டி20 போட்டி: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்


2வது டி20 போட்டி: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @ProteasMenCSA

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.

டார்வின், ஆக.12-

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டார்வினில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி அதே டார்வின் மைதானத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. ஆனால் பேட்டிங்கில் விக்கெட் கீப்பர் ரையான் ரிக்கெல்டன் (71 ரன்), ஸ்டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (37 ரன்) தவிர மற்றவர்கள் சொதப்பினர்.

இதே போல் பீல்டிங்கில் 4 கேட்ச்களை நழுவ விட்டது பின்னடைவாக அமைந்தது. தவறுகளை திருத்திக் கொண்டு சரிவில் இருந்து மீண்டு வர தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும். அதேவேளையில் இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியா முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

1 More update

Next Story