2வது டி20 போட்டி: அயர்லாந்து - இங்கிலாந்து போட்டி ரத்து

Image Courtesy: @cricketireland
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது
டப்ளின்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி டப்ளினில் இன்று நடக்க இருந்தது. ஆனால், இந்த போட்டிக்கான டாஸ் போடுவதற்கு முன்னரே அங்கு மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக 2 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 21ம் தேதி நடக்கிறது.
Related Tags :
Next Story






