இந்தியாவுக்கு எதிரான 2வது டி20: ஒரு மாற்றத்துடன் களம் இறங்கும் இங்கிலாந்து


இந்தியாவுக்கு எதிரான 2வது டி20: ஒரு மாற்றத்துடன் களம் இறங்கும் இங்கிலாந்து
x

Image Courtesy: AFP

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையை நீட்டிக்கும் முனைப்புடன் இந்திய அணி விளையாட உள்ளது. அதே சமயம் முந்தைய போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அணியிலிருந்து ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கஸ் அட்கின்சனுக்கு பதிலாக பிரைடன் கார்ஸ் இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணி விவரம்: பென் டக்கட், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.


1 More update

Next Story