3-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு


3-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
x

ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

சவுத்தம்டான்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தம்டானில் இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

இங்கிலாந்து: ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத்

தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரெவிஸ், வியான் முல்டர், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், கோடி யூசுப், நந்த்ரே பர்கர்

1 More update

Next Story