5-வது டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 4 மாற்றங்கள்

image courtesy:BCCI
குல்தீப் யாதவுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது. இந்த ஆட்டத்திற்கான இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கடந்த போட்டியில் (4-வது போட்டி) அறிமுகம் ஆன அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக கருண் நாயர், துருவ் ஜூரெல், ஆகாஷ் தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல் அர்ஷ்தீப் சிங்குக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:
இங்கிலாந்து: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்






