வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு


வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு
x

image courtesy: ICC

வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த 3 போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி வரும் நவம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸ்மத்துல்லா ஷாகிடி தலைமையிலான அந்த அணியில் முகமது நபி, ரஷீத் கான், ரஹ்மட் ஷா, குர்பாஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு:-

ஹஸ்மத்துல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மட் ஷா, குர்பாஸ், இக்ரம் அலிகில், அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், செடிக்குல்லா அடல், தர்விஷ் ரசூலி, ஓமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், ரஷீத் கான், நங்கயல் கரோடி, எம் காசன்பர், நூர் அகமது, பசல் ஹாக் பரூக்கி, பிலால் சமி, நவீத் சத்ரான், பரீத் அகமது மாலிக்.

1 More update

Next Story