ஆசிய கோப்பை அரையிறுதி : பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு


ஆசிய கோப்பை அரையிறுதி : பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு
x

Image : AsianCricketCouncil

தினத்தந்தி 26 July 2024 1:40 PM GMT (Updated: 26 July 2024 2:25 PM GMT)

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சமரி அதபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார்

தம்புல்லா,

9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. வங்காளதேச அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தொடர்ந்து நடைபெறும் 2வது அரையிறுதியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சமரி அதபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பாகிஸ்தான் அணி ,முதலில் பேட்டிங் செய்கிறது.


Next Story